இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 19 வயது பிரிவினருக்கான Tier B இல் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் மகாஜனக்கல்லூரி அணி மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி அணியை எதிர்கொண்டது முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா 50 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரி 37ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 135 ஓட்டங்களை பெற்று கொண்டது.மகாஜனா 124 ஓட்டங்களினால் வெற்றியை பெற்றுக் கொண்டது..🏏
By: Pirathee