மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் சுமார் ஒரு மாத காலமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
காலை நிலவரப்படி நீர்த்தேக்கத்தின் வான்வெளி மட்டத்தை எட்டுவதற்கு இன்னும் 10 அடிகள் உள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 93,800 ஏக்கர் அடியாகவும், பரப்பளவு சுமார் 1,790 ஏக்கராகவும் உள்ளது.
தற்போது பெய்து வரும் கடும் மழையுடன், பிரதானமாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான கனியன், லக்ஷபான, புதிய லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய நீர் மின் நிலையங்களுக்கான நீர் பிரதானமாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்திலிருந்து விநியோகிக்கப்படுகிறது.