மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நவிமும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2 வது பந்தில் கேப்டன் ரோகித் சர்மா, 5 வது பந்தில் இஷான் கிஷன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அதிரடி வீரர் ப்ரீவிசை 4 ரன்களில் முகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, 23 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து திணறிய மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா ஜோடி நிதானமாக ஆடி மீட்டனர். சூர்யகுமார் யாதவ் 32 ரன்களில் வெளியேற, திலக் வர்மா அரைசதம் அடித்தார்.