நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி சிலர் தொடருந்து நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தொடருந்து நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவிட் தொற்று பரவிய காலத்தில் தொடருந்து பயணச்சீட்டுகள் முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை எனவும், இதனை வழக்கமாகக் கொண்டு தொடருந்து பயணிகள் தொடருந்து நிலையங்களை விட்டு வெளியேற முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் பெரும்பாலும் கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களில் காணப்படுவதாகவும் நிலைய அதிபர்கள் தெரிவித்தனர்.
பயணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என ரயில்வே துணைப் பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.இவ்வாறு பயணிக்கும் பயணிகளை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.