செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைதைத்திருநாளில் மாற்றம் தரும் மகிழ் வாழ்வு மலரட்டும் ; அமைச்சர் டக்ளஸின் தைப்பொங்கல் வாழ்த்து.

தைத்திருநாளில் மாற்றம் தரும் மகிழ் வாழ்வு மலரட்டும் ; அமைச்சர் டக்ளஸின் தைப்பொங்கல் வாழ்த்து.

Published on

spot_img
spot_img

தைப்பொங்கல் திருநாளில் விரைவில் சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ் வாழ்வு மலரட்டும் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“தைப்பொங்கல் திருநாள் நாம் நேசிக்கும் தொன்று தொட்ட தமிழர் பண்பாட்டு பெருநாள். உழுதுண்டு வாழும் உழவர் மக்கள் காலந்தோறும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள்.

தமது வாழ்வுயர வழிவகுத்த சூரியனுக்கு நன்றி செலுத்துவது போல், தமது வாழ்வெங்கும் மலர்ந்தும் மறையாத மாசற்ற ஒளிச்சுடராக நின்று, இருள் சூழ்ந்த இடர் பூமியில் இருந்து நடை முறை சாத்தியமான பாதையில் தம்மை விடிவை நோக்கி அழைத்து செல்பவர்களுக்கும் தமிழ் மக்கள் முழுமையான நன்றியை செலுத்த முன்வரவேண்டும்.

அரசியல் அதிகாரங்களை மக்கள் நலன் சார்ந்து சரிவரப் பயன்படுத்துவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் வல்லமை உள்ளவர்களுக்கு வலிமை சேர்ப்பதே நாமார்க்கும் அடிமையல்லோம் யமனை அஞ்சோம், நரகத்தில் இடர்படோம் என நிமிர்ந்தெழும் காலத்திற்கு வழி சமைக்கும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற எமது மக்களின் நம்பிக்கைகள் நிறைவேறி வருகின்றன.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என தொடங்கும் புதுவாழ்வு நோக்கி பயணிக்கும் மதிநுட்ப சிந்தனையே இன்று வெற்றி பெற்று வருகிறது. நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வருவதையே வரலாறு இன்று மீண்டும் ஏற்றுக்கொண்டு வருகின்றது.

வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும், உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதி எங்கும் ஓங்க வேண்டும். இவைகளை நோக்கி பயணிப்போம்.

இன்றே விழித்திருப்போம்,.. நல்லதே நடக்கும் நாளை என்ற நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்” இவ்வாறு வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest articles

24 மணி நேரத்திற்குள் மிக்பெரிய சாதனையை படைத்த GOAT பட பாடல்….

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்....

 இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடையை நீக்க தீர்மானித்துள்ள இந்தியா …..

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...

ஆனைக்கோட்டை பகுதியில் ஆசிரியை உயிரிழப்பு .!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட...

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை...

More like this