தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் சட்ட ரீதியாக தீர்மானிக்கவில்லை எனவும் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை, ஒத்திவைக்க எந்த தேர்தலும் இல்லை” என்று அவர் கூறினார்.
இன்று (பிப்ரவரி 23) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு தனது முன்னுரிமை என்று குறிப்பிட்டார். “நான் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறேன். அதைக் கட்டவில்லையென்றால் நாடு எஞ்சியிருக்காது” என்றார்.
மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டைப் பாதுகாத்தால் மாத்திரமே அரசியலமைப்பின் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
“தேசம் இல்லாமல் அரசியலமைப்பை உருவாக்க முடியாது. ஜனாதிபதியின் முதல் கடமை தேசத்தைப் பாதுகாப்பதும், பின்னர் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் ஆகும்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு அமைய புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.