நேற்று (11) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற Division-01 THE BALL BLASTER பாடசாலை மட்ட தேசிய உதைப்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகி கிழக்கு மான்ணுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களை வரவேற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாயிலில் வரவேற்கும் நிகழ்வு இன்று (12.12.2023) காலை ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாதனை மாணவர்கள், பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்களும், உதைப்பாட்ட ஆர்வலர்களும் கலந்து கொண்டதுடன், இக்ரஃ வித்தியாலய ஆசிரியர்களும் ஏற்பாடு ஒத்துழைப்புனை வழங்கியிருந்தனர்.
BY: Pirathee