இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சர்வதேச கடற்பரப்பில் பாரியளவிலான போதைப் பொருட்களை வைத்திருந்த ஆறு நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும், அவர்களின் பல நாள் மீன்பிடி இழுவை படகும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.