தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06 விபத்துக்களால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கள் காரணமாக நெடுஞ்சாலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பெரும்பாலான வாகனங்களுக்கு முன் மற்றும் பின் பகுதிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களுக்கு இடையே இடைவெளி விட்டு செல்லாமையினால் இந்த விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .