நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயக் கப்பல் திருவிழாவில் தென்னிந்திய பிரபல பாடகி நித்யஸ்ரீ குழுவினரின் இசை நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவம் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகி இன்று(30) கப்பல் திருவிழா இடம்பெறவுள்ளது.இந்நிலையில் இன்று இரவு தமிழக தென்னிந்திய கர்நாடக, பக்திப் பாடகி நித்யஸ்ரீயின் விசேட இசைக் கச்சேரி இடம்பெறவுள்ளது.
இசைக் கச்சேரியினை தொடர்ந்து நாளை அதிகாலை இரண்டு மணியளவில் வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று அதனைத் தொடர்ந்து நாகேஸ்வரப் பெருமான் வெளிவீதி உலாவரும் வேளையில் வடக்கு வீதியில் அதிகாலை 4 மணியளவில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் ஆட்டம் வைபவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.