தெனியாய – இறக்குவானை பிரதான வீதியின் ஜம்புகஸ்வெட்டிய பகுதியில் முச்சக்கரவண்டி சுமார் 700 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 62 வயதுடைய ஒருவரும், 61 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.