அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் ஒருவரின் ஜனாஸா நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு நேற்றிரவு குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய மாணவனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த மாணவனின் மரணம் தற்கொலை அல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது களத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மான்பை பேணும் விதமாக மக்களை கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.