யாழில் ஆண் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
யாழ் வடமராட்சி பகுதியில் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தின் அருகே உள்ள கடையில் இருந்தே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு பணிபுரியும் 36 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தற்கொலையா? கொலையா? என நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.