test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!

Published on

spot_img
spot_img

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கி, சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் காவு வாங்கி உள்ளது. இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12,391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் தீவிரம் அடைந்து வருகின்றனர்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this