துருக்கியில் ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களின் இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்து உயிர் பிழைத்துள்ளது.
இதனால், இந்த பெண் குழந்தை அதிசய குழந்தை என்று அறியப்படுகிறது.
நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதால், குழந்தையை பெற்றெடுக்கும் போதே தாயும் தந்தையும் உயிரிழந்துள்ளனர்.
இந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், சிரியாவில் நடந்த கொடூரமான போரின் காரணமாக டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரின் வரை இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரேஸ் என்ற இருளிலும், மழையிலும், குளிரிலும் பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.