துருக்கியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவுக்கு அறிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் பற்றிய தகவல்களுக்கும், இலங்கையர்கள் பற்றிய விசாரணைகளுக்கும், துருக்கிய தூதரகத்தை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
00903124271032
00905344569498
துருக்கியில் சுமார் 270 இலங்கையர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தூதரகத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அனர்த்த பிரதேசத்தில் இருந்த ஒருவர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள மற்ற 13 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.