பாணந்துறையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு சில மணித்தியாலங்களின் பின்னர், இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை குலீகொட பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.42 வயதான அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, குற்றவாளியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை பாணந்துறை பின்வத்த பகுதியில் சொகுசு வாகனம் ஒன்றின் சாரதி ஆசனத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் உயிரிழந்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது.