நியூயோர்க்கில் ANI செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கனடா-இந்தியா இராஜதந்திர தகராறு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலிசாப்ரி, உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள கனடிய பிரதமரை கடுமையாக சாடினார். “கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கை எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஏனெனில் அவர் ஆதாரமற்ற பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்று அலிசாப்ரி கூறினார்.
சில பயங்கரவாதிகள் கனடாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆதாரங்கள் இன்றி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போக்கு கனடா பிரதமருக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை விவகாரத்தில் கனடா பிரதமரும் அவ்வாறே நடந்து கொண்டார். இலங்கையில் இனப்படுகொலை நடப்பதாகப் பெரிய பொய்யைச் சொன்னார்கள். இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அலி சப்ரி கூறினார். கனடாவில் சீக்கிய ஆர்வலர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டு இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போதே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.