நாவலபிட்டி – குருந்துவத்தை கல்பாய பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பரவிய தீயினால், தொழிற்சாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
இந்த தீ இன்று (07) அதிகாலை 3:30 அளவில் பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையின் கீழ் மாடியில் பரவிய தீ, தொழிற்சாலையின் மூன்று மாடிகளுக்கும் பரவியதை அடுத்து, தொழிற்சாலை முழுமையாக தீக்கிரையாக்கியுள்ளது.
தீ பரவிய சந்தர்ப்பத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் கடமைகளில் இருந்துள்ளதுடன், தீயினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீயினால் தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தேயிலை தூள்களும் தீக்கிரையாகியுள்ளன.
பிரதேசவாசிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், கண்டி தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், தொழிற்சாலை முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், நாவலபிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.