தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13.11.2023) நாடு முழுவதும் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்படுவதற்கு பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் வலய கல்வி பணிப்பாளர்களின் ஊடாக அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகிறது.