தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனர் காமினி பிரியந்த கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
51 வயதுடைய திரைப்பட இயக்குனர் வெலிமடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வேனில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்று தாக்கி வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நாடகம் தயாரிப்பது தொடர்பாக வெலிமடை பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே கடத்தல் மற்றும் தாக்குதலுக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.