சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சமையல் எண்ணெய் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. அவ்வை சண்முகம் சாலையில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் விற்பனை கடையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமள வென எரிந்ததை பார்த்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.
அதன் அடிப்படையில் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்ததால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த பகுதியில் கீழே கடைகளும் மேலே குடியிருப்பு வாசிகள் ஏராளமானோர் வீடுகள் இருந்தது.
வீடுகளிலும் தீ பரவாத விதமாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.