திருவண்ணாமலை அருகே கோளாப்பாடி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கோவையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டு இருந்த லாரி திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூர் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு அரசு விரைவு பேருந்தும், இருசக்கர வாகனனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட வாசுகி மற்றும் சாந்தி ஆகியோர் சிகிச்சை பலனின்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பலியாகினர்.
இதையடுத்து இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் வழியில் உள்ள கோளாப்பாடி கிராமத்தை இசேர்ந்த இளையராஜா, காமாட்சி, சக்திவேல், சஞ்சய், செல்வம் ஆகிய 5 நபர்களும் சக்திவேல் என்பவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை செய்து கொண்டு கோளாப்பாடி கிராமத்திற்கு செங்கம் சாலையில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும், காரும் நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சஞ்சய், செல்வம் ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மற்றும் இன்று காலை நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் 6 பேர் பலியான சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.