பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகளுக்கு நேற்று மாலை திருமணம் நடைபெற்றுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகிய இசையமைப்பாளர்களிடம் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றும் ரியாஸ்தீனைத் திருமணம் செய்துள்ளார் கதிஜா ரஹ்மான். கடந்த டிசம்பரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கதிஜா – ரியாஸ்தீன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை ரஹ்மானும் கதிஜாவும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்கள். கதிஜா – ரியாஸ்தீன் தம்பதியருக்கு ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.