Homeஉலகம்திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து-25 பேர் பலி!

திருமண நிகழ்ச்சிக்காக சென்ற மினி பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து-25 பேர் பலி!

Published on

ஆப்கானிஸ்தானில் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள்,12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் மோசமான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு காரணமாக அடிக்கடி போக்குவரத்து விபத்துகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மக்கள் மினி பேருந்தில் சயாத் மாவட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சார்-இ-புல் மாகாணத்தில் தரமற்ற சாலைகள் கொண்ட மலைப் பகுதியில் மினி பஸ் சென்றுக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்திற்கு மினி பஸ் ஓட்டுனரின் கவனக் குறைவே காரணம் என குற்றம் சாட்டினர்.

Latest articles

GMPL 3.0 இல் கலக்கப்போகும் 7 அணிகள் விபரம்.

  கல்வியங்காடு மெகா நைட் பிரிமியர் லீக் ஒவ்வொரு வருடமும் வெகுவிமர்சயாக கிப்ஸ் மைதானத்தில் இடம்பெறும், இத் தொடரில் இந்த...

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

13 ஆவது ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை இந்தியாவில் ஆரம்பமாகிறது. 10 அணிகள் மோதும் உலக கிண்ண...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இடம்பெறும் திகதிகள் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5000 சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன

இலங்கையில் வருடாந்தம் சராசரியாக 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

More like this