யாழில் திருமணமாகி மூன்று மாதங்களில் ஒரு இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கடந்த மாதம் 17ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளம் குடும்பஸ்தர் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அன்றைய தினம் விபத்து இடம்பெற்றுள்ளது.இதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை கிழக்கு குரும்பசிட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சஜந்தன் (வயது-30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த குடும்பஸ்தர் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.