நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த திருகோணமலை மீனவர்கள் 6 பேர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லையில் இந்திய கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் இந்திய எல்லைப் பகுதியில் படகு ஒன்று நிறுத்தபட்டிருப்பதைக் கண்டு படகில் வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என்பதும் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து காரைக்கால் துறைமுகத்திற்கு நேற்று மதியம் அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து குறித்த அறுவர் மீது வழக்குப்பதிவு செய்த நாகை கடலோர காவல் குழும பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.