Homeஇலங்கைதிருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

Published on

திருகோணமலையில்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் திருகோணமலை – பன்குளம் பகுதியில் (19.09.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கோமரங்கடவெல-கரக்கஹவெவ பகுதியைச் சேர்ந்த 53 வயதையுடைய அணில் சதுரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் கோமரங்கடவெல பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார்.

அந்த நபர் திருகோணமலைக்கு வருகை தந்து வீட்டுக்கு செல்லும்போது பன்குளம் 4ம் கண்டம் பகுதியில் வைத்து யானை வீதியை கடக்கும்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்த நபர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this