திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வரிச் சலுகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 25 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த வரித் திருத்தம் கடந்த 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.