மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜாவி விமான நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு எச்ஒய்4 விமான நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஹைட்ரஜனில் இயங்கும் விமான தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஸ்லோவேனியாவில் ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானத்தை எச்ஒய்4 விமான நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹைட்ரஜன் வாய் மூலமாக 750 கிமீ வரை மட்டுமே பயணிக்க முடியும் ஆனால் கிரயோஜெனிக் திரவ ஹைட்ரஜனை பயன்படுத்துவதன் மூலமாக 1500 கிமீ தொலைவு வரை 3 மணி நேரத்திற்கும் மேலாக பறக்க முடியும் என்றும் இந்த வகை விமானம் விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் எச்ஒய்4 விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.