தாய்வானை சுற்றிவளைத்த சீனா, வான்பரப்பில் 71 போர் விமானங்களாலும் கடற்ப்பரப்பில் 7 போர் கப்பல்களாலும், எல்லையில் அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.
தைவானுடனான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்றுள்ளது.
இந்நிலையில், சீனா அதனை வன்மையாக கண்டித்து மேலும் தைவானை மிரட்டும் விதமாக தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.
இதனை தொடர்ந்து சீனா தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன இராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.