இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கோடு, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் தாய்லாந்தில் தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா பயணிகள் தாய்லந்திற்கு வந்து செல்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து அதிக சுற்றுலா பயணிகளை கவருவதற்காக முயற்ச்சியாக இந்தியா மற்றும் தைவான் குடிமக்களுக்கு விசா சேவையை தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தியர்கள் விசா பெறாமலே 30 நாட்கள் வரை தாய்லந்தில் தங்கலாம் எனவும் நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை இந்த விசா சலுகை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு விசா தள்ளுபடியை அறிவித்திருக்கும் 2வது நாடு தாய்லாந்து அமைந்துள்ளது. இதற்கு முன் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மார்ச் 31, 2024 வரை விசா இல்லாத நுழைவை அனுமதிப்பதாக இலங்கை அறிவித்தது.