பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் மீரா (16) தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
இன்று (19.09.2023) அதிகாலை 3 மணியளவில் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா பிளஸ் 2 பயின்று வருகிறார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காலையில் மீராவின் அறை கதவு வெகுநேரமாக திறக்காததால் கதவை திறந்து உள்ளே சென்ற பெற்றோர் மகளை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் லாராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா மன அழுத்தம் காரணமாக இறந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.