யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கலைவாணி வீதி, வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியில் 29 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமை புரிந்து வரும் நிலையில் சீருடையில் இருந்த கயிற்றினை பயன்படுத்தி தூங்கிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அதனை தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.