கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க இன்று திறந்த நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் மன்னிப்பு கோரியதை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தீர்மானித்துள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேபால் அமரசிங்க, தனது கட்சிக்காரர் மகாநாயக்க தேரர்களிடமும் பௌத்த சமூகத்திடமும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினால், வழக்கு விசாரணையை முடிவுக்குக் கொண்டு வரத் தயார் என வழக்குத் தொடரில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
சேபால் அமரசிங்க, முறைப்பாட்டாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பௌத்த தகவல் நிலையத்தின் அகுருவெல்லே ஜினாநந்த தேரர் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
எனவே, குறித்த வழக்கை முடித்து வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சேபால் அமரசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.