தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் இன்று தெரிவித்துள்ளது.
“இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள். அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் முடிக்கப்படும்,” என்று மிரர் பிசினஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த IMF மிஷன் தலைவர் மசாஹிரோ நோசாகி கூறினார்.
இலங்கை சமீபத்தில் சில இறக்குமதி மற்றும் பரிமாற்ற கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும், அந்நிய செலாவணி மாற்றத்திற்கான விதிகள் மற்றும் சில இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்களின் மீதான தடைகள் இன்னும் உள்ளன.