Homeஇந்தியாதருமபுரி மாவட்டத்தில் பண்ணையில் மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு.

தருமபுரி மாவட்டத்தில் பண்ணையில் மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு.

Published on

அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது.

தருமபுரி அருகே திருப்பதி என்பவருக்கு சொந்தமான 360 அடி நீளமும் 22 அடி அகலமும் கொண்ட கோழிப்பண்ணையில் 5,000 கோழிகளை  வளர்த்து வந்துள்ளார். இன்று அதிகாலையில் பண்ணையின் மேல் இடி தாக்கியதால் பண்ணை முழுவதும் தீ பிடித்து எரிந்தது.

இதை கண்ட திருப்பதியின் சகோதரர் பதறியடித்து ஒட்டி சென்று தனது தம்பி திருப்தியிடம் பண்ணை தீ பிடித்தது பற்றி தெரிவித்துள்ளார். திருப்பதி, அவரது மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

திருப்பதியின் அண்ணன் மகன் பிரபு என்பவர் அரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே பண்ணையில் இருந்த 5,000 கோழிகள் தீயில் எரிந்து நாசமாகின.

பண்ணையில் ஏற்பட்ட தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டுவதனர். கோழிகள் அனைத்தும் எரிந்து தீயில் கருகியதால் தங்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது என திருப்பதி கவலை தெரிவித்துள்ளார்.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this