2024ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் தரம் 01 மாணவர்களை உள்வாங்குவது தொடர்பான விசேட அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட வார்ப்புருவைப் பயன்படுத்தி உரிய விண்ணப்பங்களைத் தயாரித்து காலக்கெடுவிற்கு முன்னர் பாடசாலை அதிபர்களிடம் சமர்ப்பிக்குமாறு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 30-07-2023 முதல் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சகம் குறிப்பிட்டது.இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் www.moe.gov.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.