தமிழ்நாட்டு விளையாட்டுத்துறைக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்திடும் வகையில், மாற்றுத்திறனுள்ள விளையாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில் சாதித்து வரும் ரமேஷ் அவர்களுக்கு, ரூ.8.25 லட்சம் மதிப்பில் பாரா பந்தயத்துக்கான சக்கர நாற்காலியை இன்று வழங்கிவைத்தார் உதயநிதி.
தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் ரமேஷ் தொடர்ந்து வெற்றி வாகை சூட வாழ்த்துகின்றோம்