தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.10 கோடியில் டெண்டர் கோரப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, முட்டுக்காடு கடற்கரை, பூண்டி அணைக்கட்டு, முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தென்காசி குண்டாறு அணை, கரூர் பொன்னையாறு அணை ஆகியவையும் மேம்படுத்தப்பட உள்ளன.
2022 – 23 சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ரூ.2.87 கோடியில் முட்டுக்காடு கடற்கரை, ரூ.2.85 கோடியில் பூண்டி அணைக்கட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்தப்பட உள்ளது.
ரூ.2.7 கோடியில் முட்டம் கடற்கரை, ரூ.4 கோடியில் திற்பரப்பு அருவியை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது.
எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வன பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு. இந்நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை ரூ.10 கோடியில் மேம்படுத்த ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.