Homeஇந்தியாதமிழ்நாட்டில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு.

Published on

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உயிரிழந்த இளைஞர், இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545  பேருக்கு இன்புளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக எச்3என்2 என்ற இன்புளுயன்சா வகை காய்ச்சல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருவதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இன்புளுயன்சா காய்ச்சலுக்கு நாடு முழுவதும் ஒரு சில உயிரிழப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை உயிரிழப்பு என்பது பூஜ்ஜிய நிலையில் இருந்தது. இதனிடையே திருச்சி மலைக்கோட்டையை சேர்ந்த 27 வயது இளைஞர், பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் நண்பர்களுடன் கோவாவுக்கு சென்றுவிட்டு குடும்பத்தினரை பார்ப்பதற்காக கடந்த 9ம் தேதி திருச்சிக்கு வந்துள்ளார்.

10ம் தேதி இளைஞருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உடல்நல கோளாறும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில மரபணு பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனை செய்ததில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா மற்றும் இன்புளுயன்சா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் இன்புளுயன்சா உயிரிழப்பு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest articles

இளம் பெண்களை தகாத தொழிலில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது!

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன இளைஞர்கள் சடலங்களாக மீட்பு.

மொனராகலை - வெல்லவாய, எல்லாவல நீர்வீழ்ச்சியில் காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21.03.2023)...

குவைத்தில் சிக்கியிருந்த 48 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

தொழில் நிமித்தம் குவைத் சென்று நீண்ட நாட்களாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்ட 48 இலங்கை...

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்கள் தாம்...

More like this