தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.வரி ஏய்ப்பு, கணக்கில் வராத பணம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அம்பாலால் குழுமம், ஆதித்யராம் குழுமம், அசோக் ரெசிடென்சி உட்பட 4 பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ரெய்ட் நடந்து வருகிறது. ஏற்கனவே ஊரடங்கு காலத்திற்கு பிறகு இழப்பை சமாளிக்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வீடுகள், நிலங்களை விற்பனை செய்தன. ஆனால் அந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுகிறது.
சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காஞ்சிபுரத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மணலி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐயப்பன் தாங்கலில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டலில் சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடன்சி ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணா நகர் 6-அவென்யூவில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு 4 வாகனங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.