செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாதமிழகத்தில் பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவச பயணம்!

தமிழகத்தில் பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவச பயணம்!

Published on

spot_img
spot_img

தமிழகத்தில் இனி ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை / பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல்.
பயண கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குதல்.

சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளை நவீனமயமாக்குதல் மற்றும் தரம் உயர்த்துதல்.
அரசு தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத் துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும் அரசு நடமாடும் பணிமனைகளை உருவாக்குதல்.

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைக்கப்படும்.
பேருந்து முனையங்களில் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாட்டு முறை காட்சிப்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பயணச்சுமைப் பெட்டிகளை வாடகைக்கு விடுதல்.

இணையவழிப் பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக இருவழிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சட்டணச் சலுகை.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். தற்போது 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this