தமிழகத்தில் ஒருவாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்படுகிறது. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே ஏடிஎஸ் கொசுக்களை அழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி, ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.வியாபாரிகள், கடை நடத்துவோர், உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 13 நாட்களில் மொத்தம் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. மதுரை மாநகராட்சியில் 7 நாட்களில் 11 குழந்தைகள் உட்பட 37 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் ஒருவருக்கு மட்டும் டெங்கு பாதிப்பு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். திருச்சி மாநகராட்சியில் 350 ஊழியர்கள் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.