வங்கி அட்டைகள் மூலம் நீர் கட்டணங்களை செலுத்தும் புதிய முறைமையை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னோடித் திட்டம் நாளை (17) ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திரு.பியால் பத்மநாத தெரிவித்தார்.
இங்கு மொபைல் அப்ளிகேஷன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொடர்பான ரசீது வழங்கப்பட்டு, வங்கி அட்டைகள் மூலம் பில் செலுத்த வாய்ப்பு உள்ளது.
இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.