மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் (CEB) அமைப்பின் கட்டுப்பாட்டின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தடையற்ற மின்சார விநியோகத்திற்கான தேவைகள் மற்றும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அண்மையில் சந்திப்பொன்றை நடத்தினார்.
மழை குறைவு மற்றும் நிலக்கரி கொள்முதல் தொடர்பான சவால்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், போதிய மழையில்லாததால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து தேவையான எரிபொருள் மற்றும் நிலக்கரியை பெறுவதற்கான மாற்று நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த மற்றும் டி.வி.சானக்க மற்றும் அமைச்சின் செயலாளர் மற்றும் மின்சார சபையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.