வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான தடுப்பூசி, வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் குழந்தைக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குழந்தை கடும் குளிர் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.