இன்று (27) காலை கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையின் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மஹவவிலிருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற புகையிரதமொன்று கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை விரைவில் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.