தமிழகத்தின் தஞ்சாவூர் அருகே தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாட்டின் தஞ்சையில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த துக்கமான சமயத்தில் உறவுகளை இழந்த குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 லட்ச ரூபாய் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.