கடந்த சில தினங்களாகவே இளையராஜா பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிகம் இருந்து வருகிறது. அவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறிய கருத்து தான் சர்ச்சைக்கு காரணம்.
கருத்தை திரும்ப பெற முடியாது
நரேந்திர மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு கூறிய கருத்தை இளையராஜா திரும்ப பெற வேண்டும் என பலரும் கேட்டு வந்த நிலையில் இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அதனால் சமூக வலைத்தளங்களில் அவர் மீதான ட்ரோல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி யுவன் ஷங்கர் ராஜா தான் கருப்பு திராவிடன் என வெளியிட்ட பதிவும் அதிகம் வைரல் ஆனது.
பாடல் மூலமாக பதில்?
இந்நிலையில் இளையராஜா தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலை அவர் பாடி இருக்கிறார்.
“நான் உன்னை நீக்க மாட்டேன்.. நீங்கினால் தூங்கமாட்டேன். பாடுவேன் உனக்காகவே” என இளையராஜா பாடி இருக்கிறார்.
பலரும் அவரை விமர்சித்து வரும் நிலையில் அவர்களுக்கு பதிலாக தான் இந்த வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.